விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
16 உரிமையாளரின் உரிமைகள்
- பயனர் தற்போதுள்ள சாஃப்ட்வேரை மாற்றவும், மொழிபெயர்க்கவும், பிரிக்கவும், தொகுப்புநீக்கம் செய்யவும் அல்லது ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்யவோ அல்லது அந்த சாஃப்ட்வேரின் அடிப்படையிலான எந்த ஒரு தயாரிப்பையும் உருவாக்க முயற்சிக்கக் கூடாது. அணுகல் தேவைக்கான ஆன்லைன் CUB சேவையில் உள்ள சாஃப்ட்வேர் மற்றும் மற்ற இன்டர்நெட் சார்ந்த சாஃப்ட்வேர் அந்தந்த விற்பனையாளர்களின் சட்டப்பூர்வமான சொத்து என்று பயனர் ஒப்புக்கொள்கிறார். இதை பயன்படுத்த CUB மூலம் வழங்கப்படும் அனுமதி அந்த சாஃப்ட்வேர் மீதான உரிமையை தெரிவிப்பதல்ல.
17 விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் மாற்றம்
- எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எந்த நேரத்திலும் நெட் பேங்கிங் வசதி பெறுவதற்கான விதிமுறைகளில் திருத்தம் அல்லது மாற்றம் செய்வதற்கு CUB-க்கு முழு சுயேச்சையான அதிகாரம் உள்ளது. CUB அவ்வப்போது ஆன்லைன் CUB-யில் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தலாம். புதிய செயல்பாடுகளின் இருப்பு அவை கிடைக்கும் போது பயனருக்கு அறிவிக்கப்படும். புதிய ஆன்லைன் CUB சேவைகளுக்கு பொருந்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனை மாற்றங்கள் பயனரிடம் தெரிவிக்கப்படும். இந்த புதிய சேவைகளை பயன்படுத்தி பயனர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் பிணைக்கப்பட்டுள்ளதாக ஒப்புக்கொள்கிறார்.
18 மாற்ற முடியாதவை
- ஆன்லைன் CUB சேவை பயனரால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் எந்த சூழ்நிலையிலும் அவை மாற்றத்தக்கதல்ல.
19 சேவையை நிறுத்துதல்
- பின்வருபனவற்றின் அடிப்படையில் ஆன்லைன் CUB சேவையை நிறுத்தலாம்:
- 19.1 வங்கிக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாக எழுத்து வழி அறிவிப்பின் மூலம் பயனர் மூலம் விண்ணப்பித்திருந்தால்.
- 19.2 பயனருக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாக அறிவித்து எந்த நேரம் வேண்டுமானாலும் வசதியை வங்கி திரும்பப் பெறலாம்..
- 19.3 மற்ற தரப்பினர் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கடமைகள், உத்தரவாதம், பிரதிநிதித்துவம் அல்லது எதாவது நிபந்தனையை மீறினால், அதன் வியாபாரத்தை நிறுத்தி வைத்தால் அல்லது அவ்வாறு செய்வதாக மிரட்டினால், மனதார முடித்து விட நடவடிக்கை எடுத்தால், ஏதேனும் நாடு அல்லது பிரதேசத்தின் நொடித்தல், திவால், பெறுதல் உரிமை, நிர்வாகம் அல்லது கடன் நிவாரணத்திற்கான சட்டம் கடனாளருக்கு பயனளிக்கும் விதத்தில் முன்னேற்பாட்டில் நுழைந்தால் மற்ற தரப்பினருக்கு எழுத்து மூலமான அறிவிப்பை வழங்கி இரு தரப்பினரும் உடனடியாக இந்த ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தலாம்,
- 19.4 If the service is withdrawn by the Bank for a reason other than the breach of the terms and conditions by the USER, the Bank's liability shall be restricted to the prorata return of the annual charges, if any, recovered from the USER for the period in question.
- 19.5 பயனரின் அனைத்துக் கணக்குகளையும் முடிப்பது தானாகவே சேவையை நிறுத்தி விடும்.
- 19.6 இந்த நிபந்தனைகளை நிறுத்துவது அத்தகைய நிறுத்தலின் தேதியை சார்ந்த எந்த தரப்பினரின் உரிமைகள் மற்றும் தீர்வுகளை பாதிக்காது.
- 19.7 இந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால் வங்கியின் தேவைக்கேற்ப இந்த சேவைகளுடன் தொடர்புடையதாக வாடிக்கையாளர்/பயனருக்கு வழங்கப்பட்ட ஆவணங்களை பயனர் உடனடியாக வங்கியிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு நிறுத்தப்பட்டாலும், பயனர்/வாடிக்கையாளர் செயல்படுத்தப்பட்ட விதிகளுடன் தொடர்புடைய வரை இந்த நிபந்தனைகளின் விதிகளுடன் பிணைப்பில் இருப்பர்
20 அறிவிப்புகள்
- இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் உள்ள அறிவிப்புகள் வங்கி மற்றும் பின் வருவனவற்றால் கொடுக்கப்படலாம்
பயனர்
- 20.1 இரண்டு தரப்பினரின் மெயில் பாக்ஸிற்கு மின்னணு மூலம் அனுப்பப்படும். அத்தகைய அறிவிப்புகள் எழுத்து வழி அறிவிப்பாக தான் கருதப்படும்
- 20.2 எழுத்து வழியாக அவர்களின் கையில் கொடுத்து அல்லது பயன்பாட்டாளர் இறுதியாகக் கொடுத்த முகவரிக்கு அதைத் தபால் மூலம் அனுப்புதல் மற்றும் அது வங்கியாக இருந்தால் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்படும். அதே நேரம் அவை பெறப்படாததுக்கு வங்கி எந்த விதத்திலும் பொறுப்பாகாது.
- 20.3 அதனுடன், அதன் இணையதளத்தில் ஆன்லைன் CUB பயன்பாட்டாளர்களுக்கு பொருந்தும் பொதுவானத் தன்மையுடைய அறிவிப்புகளையும் வங்கி வெளியிடலாம். அத்தகைய அறிவிப்புகள் ஒவ்வொரு பயன்பாட்டாளர்களுக்கு தனித்தனியாக வழங்கப்படும் அறிவிப்பின் அதே விளைவைக் கொண்டிருக்கும்.
21.அரசாங்க சட்டம்
- This agreement and or the operations in the accounts of the USER maintained by the Bank and or the use of the services provided through ONLINECUB shall be governed by the laws of the Republic of India and no other nation. USER and the Bank agree to submit to the exclusive jurisdiction of the Courts of competent jurisdiction in Chennai, Tamilnadu, India as regards any claims or matters arising under these terms and conditions. The Bank accepts no liability whatsoever, direct or indirect, for non-compliance with the laws of any country other than the Republic of India. The mere fact that the service can be accessed through Internet by a USER in a country other than India shall not be interpreted to imply that the laws of the said country govern these terms and conditions and or the operations in the accounts of the USER and or the use of. Notwithstanding anything stated elsewhere in this Agreement, this Agreement shall also be subject to any / all present or future Rules, Regulations, Directives, Instructions and Advice of the Reserve Bank of India or any other concerned Regulatory Authorities as applicable from time to time. The aforesaid Rules, Regulations, Directives, Instructions and Advice shall over-ride any terms of this Agreement, as from the date they are applicable. In particular, the Bank's obligations under this Agreement shall always be subject to the aforesaid Rules, Regulations, Directives, Instructions and Advice.
22.எதிர்காலக் கணக்குகளுக்குப் பொருந்தும் தன்மை
- CUB அல்லது எதாவது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் எதாவது சேவை அல்லது தயாரிப்புகளுக்கு பயனர் மேலும் கணக்குகள் தொடங்கினாலோ அல்லது சப்ஸ்கிரைப் செய்தாலோ மற்றும் பயனர் அப்போதிலிருந்து பயன்படுத்தும் அத்தகைய கணக்குகள் அல்லது தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கு CUB நெட் பேங்கிங்கை விரிவுப்படுத்தினால் நிபந்தனைகள் தானாகவே பயன்பாட்டாளரால் பயன்படுத்தப்படும் நெட் பேங்கிங்கிற்குப் பொருந்தும் என்று CUB மற்றும் பயனர் ஒப்புக்கொள்கின்றனர்.
23 தேவையான இருப்பை பராமரித்தல்
- இணையம் வழியாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்கு தேவையான நிதி (அல்லது முன்னேற்பாடு செய்யப்பட்ட கடன் வசதிகள்) இருப்பதை பயன்பாட்டாளர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் போதிய நிதி இல்லாமை மற்றும்/அல்லது கடன் வசதிகள் இல்லாத காரணத்தால் எழும் தவறிற்கு CUB வங்கிப் பொறுப்பேற்காது, அவ்வாறு தவறியதை பயன்பாட்டாளரின் முன் அனுமதியின்றி அல்லது முன்னறிவிப்பின்றி CUB சுயேட்சையாக மேற்கொள்ளலாம் மற்றும் செலவுகள் மற்றும் கட்டணங்கள் தொடர்புடையது மற்றும் அதனால் உண்டான ஓவர் டிராஃப்ட், முன்பணம் அல்லது கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துவது பயனரின் பொறுப்பாகும்.
- குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காததிற்கு CUB சுயேட்சையாக கட்டணத்தை வசூலிக்கலாம். குறைந்தபட்ச இருப்பு நிபந்தனையுடன் கூடுதலாக CUB நெட் பேங்கிங்கை பயன்படுத்துவதற்கு சேவைக் கட்டணத்தையும் வசூலிக்கும், CUB அதை பயனருக்கு அவ்வப்போது அறிவிக்கும். அத்தகைய சேவைக் கட்டணங்களில் மாற்றங்களை நெட் பேங்கிங்கின் மூலமாக பயனருக்குத் தெரிவிக்கப்படும். அவ்வப்போது CUB நிர்ணயிக்கும் நெட் பேங்கிங் தொடர்புடைய கட்டணங்களை கணக்குகளில் ஒன்றிலிருந்து எடுத்துக் கொள்ள பயனர் CUB-க்கு அதிகாரமளிக்கிறார். முன்னர் கூறப்பட்டுள்ள குறைந்தபட்ச தொகையை விட டெபாசிட் தொகைக் குறைவானதாக இருந்தால் மற்றும்/அல்லது சேவைக் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தால் பயனருக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் மற்றும் அல்லது அத்தகைய திரும்பப் பெறுதலுக்கு எந்த காரணமாக இருந்தாலும் அதற்கு பொறுப்பேற்காமல் CUB நெட் பேங்கிங்கின் முன் ஏற்பாடுகளை முழுமையாகவோ பகுதியாகவோத் திரும்பப் பெறலாம்.
| பின்செல்லவும் அடுத்து |
|---|







